தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவாக சுடர்வணக்க நிகழ்வு ,Germany- Berlin,Landau,Hanover.

753 0

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவாக பேர்லினில் நடைபெற்ற சுடர்வணக்க நிகழ்வு

எங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகடித்து பறந்து போன 15ம் ஆண்டு வணக்க நிகழ்வானது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் ஏற்பட்டில் தற்போதைய யேர்மனிய சட்டவிதிகளுக்கமைவாக நினைவு கூறப்பட்டது.

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எமது தலைமைக்கு பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின்குரல் அணைந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டது. தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ தேசத்திற்கு இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.

ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Landau

லாண்டொ நகரத்தில் தேசத்தின் குரல் பாலா அண்ணா
வின் 15வது வணக்க நிகழ்வு நடைபெற்றது.
பொது சுடர் ஏற்றி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு, பாலாண்ணாவின்
திருவுருவபடத்திற்கு இளையோரினால் மாலை அணிந்து, ஈகைசுடர்
ஏற்றப்பட்ட உணர்வுப்பூர்வமாக கலந்துகொண்ட மக்கள் மலர்வணக்கம்
செய்து அகவணக்கம் செய்யப்பட்டது.

பல இளையோர் கலந்துகொண்டு விடுதலை பாடல்களை
பாடி வந்திருந்த மக்களை தமிழீழத்திற்கு கொண்டு சென்றனர்
வேறு பொதுமக்களும் பாடல்கள் வழங்கினர் வேறு நீண்ட கால விடுதலைபேச்சாளர் பாலா அண்ணாவின் நினைவுகளை
எடுத்துரைத்து தற்போதுள்ள அரசியல் நிலைமைகளை தெளிவாக விளக்கினார்

மற்றும் ஒரு வளர்ந்து வரும் சிறந்த பேச்சாளர் உணர்வுகளை பகிர்ந்து
கொண்டு மக்கள். முன்னெடுக்க வேண்டிய விடயங்களை எடுத்துரைத்தார் மேலும் மக்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர்.
நம்புங்கள் தமிழிழம் பாடலுடன் நிகழ்வு நிறைவேறியது

கனோவர் நிகழ்வு