சீனாவில் இசவ் நகரத்தில் விரைவுச்சாலை மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சீனாவின் ஹுபேய் மாகாணத்தில், இசவ் நகர விரைவுச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலம் ஒன்று எதிர்பாராமல் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மீது சென்றுக்கொண்டிருந்த 3 கண்டெய்னர் லாரிகள் கீழே விழுந்து நொறுங்கின. மேலும் இடிபாடுகளுக்கு இடையில் கார் ஒன்று சிக்கி நொறுங்கியது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

