வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த போது காட்டு யானை தாக்கியதில் 37 வயதான பூப்பந்தாட்ட நடுவர் ஒருவர்,நேற்று (19) உயிரிழந்துள்ளார் என்று கெப்பத்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையைச் சேர்ந்த சிவபாலசுந்தரம் மயூரன் என்பவரே உயிரிழந்துள்ளார் என்பதுடன், கொழும்பில் இடம்பெற்றுவரும் 69ஆவது தேசிய பூப்பந்தாட்ட நிகழ்வின் நடுவராக செயற்பட்டுவருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.
கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு ரயில் வந்த அவர், திருகோணமலையை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே வீதியைக் கடக்க முயன்ற காட்டு யானை தாக்கியுள்ளது என்று தெரிவித்த கெப்பத்திகொல்லாவ பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

