கிளிநொச்சியிலிருந்து சென்ற பஸ் விபத்து; 17 பேருக்கு காயம்

233 0

கிளிநொச்சியிலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்திற்குள்ளாகி உள்ளது.

அம்பாறை – பதியதலாவை பகுதியில் இடம்பெற்ற குறித்த பஸ் விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

விபத்தில் காயமடைந்த 27 பேரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.