தலாய் லாமாவின் போதனைகளை ஏற்பாடு செய்யும் இலங்கை சங்கம்

246 0

இலங்கை திபெத்திய புத்த சகோதரத்துவச் சங்கத்தின் ஏற்பாட்டில்  நேற்றும் இன்றும் விசேட மஹா சதிபத்தான சூத்திரம் பற்றிய போதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது

இது இணையம் ஊடாக இடம்பெறுகின்றது.

இந்த நிகழ்வில் தாய்லாந்து, மியான்மர், இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள மகா சங்கத்தினர் கலந்துக்கொள்கின்றனர்.

இலங்கை திபெத்திய பௌத்த சகோதரத்துவ சங்கத்தின் தலைவரும், சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் பிரதிச் செயலாளருமான  டெமெண்டா போரங்கே  தலைமையில் இந்த  சிறப்பு போதனை நிகழ்வு இடம்பெறுகின்றது.

தலாய் லாமாவின் புனித போதனைகளை பகிந்துக்கொள்வது நிகழ்வின் முக்கிய அம்சமாகும்.

தாய்லாந்து, திபெத்திய புத்த மையம் – சிங்கப்பூர் மற்றும் மலேசியா, புத்ததாச இந்தபன்னோ ஆவணக் காப்பகம் – தாய்லாந்து, ஸ்ரீவிஜயா மாநில பௌத்தக் கல்லூரி , இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் தேரவாத புத்த கவுன்சில் ஆகியவை இணை அமைப்பாளர்களாக உள்ளன

கலாநிதி வஸ்கடுவ மகிந்தவன்ச மகாநாயக்க தேரர், கலாநிதி ஒமல்பே சோபித நாயக்க தேரர், பேராசிரியர் பல்லேகந்தே இரத்தினசார அநுநாயக்க தேரர், மாதம்பகம அசாஜி அனுநாயக்க தேரர், நாரம்பனாவே ஆனந்த நாயக்க தேரர் உட்பட இலங்கையைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மகா சங்கத்தினர் நிகழ்வில் கலந்துக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.