கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

247 0

கனடா – பிரம்டன் நகரில் காணாமல் போன தமிழ் இளைஞர் ஒருவரை கண்டுப்பிடிக்க உதவுமாறு பீல் பிராந்திய பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

24 வயதான நிவேதன் அழகேஸ்வரன் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 3ம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இறுதியாக பிரம்டன் Calderstone Road and Lexington Road பகுதியில் காணப்பட்டுள்ளார். அவர் கடைசியாக 2008 Red Nissan Rogue SUV காரை ஓட்டிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர் 5 – 6 அடி உயரம் மற்றும் 130 பவுண்டுகள் எடையுள்ளவர் என விவரிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த இளைஞரின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவர் குறித்த தகவல் தெரிந்தால் 905-453-3311 extension 2133 என்ற எண்ணில் அழைக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.