வடமாகாணத்தில் மீண்டுமொரு ஆயுதக் கிளர்ச்சி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக யாழ்.சிவில் சமூக மையம் தெரிவித்துள்ளது.
வடக்கில் ஏற்கனவே ஆயுதக் குழுக்கள் இருப்பதாக அதன் தலைவர் அருண் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அந்தக் குழுக்களின் பின்னணியில் இந்தியாவும், ரோ உளவுத்துறையும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

