வேளாங்கண்ணியில் 22-ந்தேதி கிறிஸ்துமஸ் விழா: டி.டி.வி.தினகரன் பங்கேற்பு

280 0

வேளாங்கண்ணி, ஜி.எஸ்.ரிசார்ட்ஸ் அரங்கில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்ற இருக்கிறார்.

அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘அன்பே கடவுள்’ என்று போதித்த ஏசுநாதர் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி கிறிஸ்தவப் பெருமக்களின் புனிதத் தலங்களில் ஒன்றான வேளாங்கண்ணியில் வரும் 22-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு ஐக்கிய கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.

வேளாங்கண்ணி, ஜி.எஸ்.ரிசார்ட்ஸ் அரங்கில் நடைபெற உள்ள இந்த விழாவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்ற இருக்கிறார்.

விழாவில் சிறிஸ்துவ பேராயர்கள், ஆயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில் சமூக இடைவெளியைப் பின்பற்றி, முக கவசம் அணிந்து தொண்டர்கள் பங்கேற்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.