மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தால் இயந்திர மொழி பெயர்ப்புப் பொறி உருவாக்கம்

302 0

மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திலுள்ள தேசிய மொழிகள் செயற்பாட்டு மையம் (NLPC) சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வ ஆவணங் களை மொழிபெயர்க்க SiTa எனப்படும் கணினி உதவி யுடன் கூடிய மொழிபெயர்ப்பு முறைமையை (SiTa Computer-Assisted Translation System) உருவாக்கியுள்ளது.

ஆவணங்களை மொழி பெயர்ப்பதற்கு அதிநவீன இயந்திர மொழிபெயர்ப்புப் பொறியை SiTa பயன்படுத்து கின்றது. பின்னர் இந்த மொழிபெயர்ப்பு தொழில்சார் மொழிபெயர்ப்பாளர்களால் பரீட்சிக்கப்பட்டு திருத்தப் படுவதுடன் இறுதியாக மீளாய்வாளரால் சரிபார்க்கப்படுகின்றது.

இம் மூன்று படிமுறையின் செயன்முறையைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்புகளின் துல்லியத்தன்மை மற்றும் வேகம் ஆகிய இரண்டையும் நாங்கள் மேம்படுத்தியுள்ளோம். மேலும் நாங்கள் உங்கள் ஆவணங்களின் இரகசியத் தன்மையையும் பேணி வருகின்றோம்.

தற்போது ஆங்கிலம், சிங்களம் அல்லது தமிழ் மொழிகளிலிருந்து ஒன்று அல்லது ஏனைய இரண்டு மொழிகளுக்கும் மொழிபெயர்க் கப்படுகின்ற இச்சேவை யானது அரச நிறுவனங்களின் ஆவண மொழிபெயர்ப்புக்காக கிடைக்கப் பெறுகின்றது.

இதனைப் பயன்படுத்தி மொழிபெயர்க்கக் கூடிய ஆவணங்கள்:

சுற்றறிக்கைகள், அறிக்கைகள் மற்றும் கடிதங்கள்

மொழி பெயர்த்தல் சேவைக்கான பணியொன்று வழங்கப்பட்ட அடுத்த வேலைத் தினத்தில் 360 சொற்கள் வரையிலான ஆவணமொன்றை மொழிபெயர்க்க மற்றும் மீளாய்வு செய்ய நாம் எதிர்பார்க்கின்றோம். நீண்ட ஆவணங்களுக்கு அதிக காலமெடுக்கலாம். நாம் ஒருங்குறியில் அமைந்துள்ள டிஜிட்டல் ஆவண வடிவத்தை (Unicode .docx format) மாத்திரமே ஏற்றுக்கொள்வோம். உரைப் பகுதி மாத்திரமே (விம்பங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், மேலும் பல இன்றி) மொழிபெயர்க்கப்படும்.

நீங்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்த விரும்பினால் மொழிபெயர்ப்புச் சேவையைப் பயன்படுத்துவதற்கு விண் ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூரணப்படுத்தி sita@uom.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். மேலதிக விபரங்களுக்கு 077 216 3628 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது sita@uom.lk எனும் மின்னஞ்சல் ஊடாகத் தொடர்பு கொள்ளவும்.

இம்முறைமையானது அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சின் AHEAD செயற்பாடுகள் என்பவற்றின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது என மொறட்டுவ பல்கலைக்கழக SiTa செயற்றிட்டப் பணிப்பாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் தெரிவித்துள்ளார்.