நிரூபிக்க வேண்டும் என்ற தேவை முஸ்லிம்களுக்குக் கிடையாது

278 0

“மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம்களுக்கு காணிப் பிரச்சினை இருக்கின்றது” என்பதை ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் சாணக்கியன் ராசமாணிக்கம் ஆகிய  இருவரும் விவாதமொன்றுக்குச் சென்று தான் நிரூபிக்க வேண்டும் என்ற எவ்விதத்  தேவையும் முஸ்லிம்களுக்குக்  கிடையாது என காத்தான்குடி நகரசபையின்  நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் அஷ்ஷெய்க் ஏ.எல்.ஏம்.சபீல் நழீமி  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இது தேசியத்திலும் சர்வதேசத்திலும் அறியப்பட்ட தெளிவான விடயம். இவ்வாறான விவாதம் இம் மாவட்டத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் தேவையில்லாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும்.  காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆணைக் குழுக்களின் சிபாரிசுகளை அமுல்படுத்தினால் போதும்” என்றார்.