சீனாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 4 பேரில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.
சீனாவின் கிழக்கே ஜியாங்சி மாகாண பகுதியில் நன்சாங் நகரில் ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் இன்று மாலை 3.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் 4 பேர் கடுமையாக காயமடைந்து உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் சிக்கிய 4 பேரில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 2 பேரை காணவில்லை. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

