இந்தியாவில் கொரோனா நிலவரம்- 571 நாட்களில் இல்லாத அளவில் குறைந்த தினசரி பாதிப்பு

312 0

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 203 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 252 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,75,888 ஆக அதிகரித்துள்ளது.


கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில் காலை 8 மணிவரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,784 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தினசரி பாதிப்பில் கடந்த 571 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 2,434 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அங்கு கொரோனா பரவல் விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழ் சரிந்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 3 ஆயிரத்து 644 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 203 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 252 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,75,888 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து 7,995 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 38 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 88,993 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 563 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.

தடுப்பூசி
நாடு முழுவதும் நேற்று 66,98,601 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 133 கோடியே 88 லட்சத்தை கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி நேற்று 9,90,482 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 65.76 கோடியாக உயர்ந்தது.