இலங்கைக்கான சீன மக்கள் குடியரசன் தூதுவர் கீ சென்ஹொங் இருநாள் விஜயம் மேற்கொண்டு வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயம் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிமைகளில் நடைபெறவுள்ளதாக சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த விஜயத்தின் போது, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதோடு, கடற்றொழிலாளர்களுக்கான ஒருதொகுதி உபகரணங்களை வழங்கும் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

