ஒருமித்த குரலாக ஒலிக்க முடியும்

452 0

வீட்டுப்பணிப்பெண்கள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் அப்போதுதான் ஒருமித்த குரலாக எங்களால் முன்னோக்கி செல்ல முடியும் என புரடெக் அமைப்பின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் கருப்பையா மைதிலி தெரிவித்தார்.

ஹட்டன் லா எடம்ஸ் விருந்தகத்தில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்
அண்மையில் இடபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வீட்டு பணிப்பெண்களின் கோரிக்கை அல்லது பிரச்சினை என்பது சுமார் 200 வருட பழமை வாய்ந்தது.

வீட்டுப்பணிப்பெண்களின் உரிமைகள் என்பது தீர்க்கப்படாத ஒன்றாக காணப்படுகின்றது.எனவே வீட்டுப்பணிப்பெண்கள் தொடர்பாக நாம் கூறுவது அவர்களின்
உரிமைகள் என்ன இவர்களுக்கு கிடைக்கும் குறைந்த பட்ச வருமானம் என்ன என்பதை
தீர்மானிக்க வேண்டும். இந்த பிரச்சினைகளை எடுத்து செல்லும் நோக்கிலே புரடெக்
தொழிற்சங்கம் செயல்படுகின்றது.

வீட்டுப்பணிப்பெண்கள் தங்களுக்கான சம்பளத்தை ஒரு கோரிக்கையாக வைக்கப்படல் வேண்டும். அத்துடன் தான் எட்டு மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்கின்றோம் என்பதை உணர வேண்டும். அது போல் எமது சங்கம் கூட இந்த கஸ்டமான பணியை குறித்த வீட்டுப்பணிப்பெண்களுக்குஉணர வைப்பதற்கு முயற்சிக்கின்றது.மேலும் ஒரு சிலர் வீட்டுப்பணிப்பெண்கள் என்ற சொற்பதத்தை கூறுவதையே தவிர்க்கின்றனர். இப்படியான சூழ்நிலையில்தான் இந்த புரடெக் தொழிற் சங்கத்தில் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்களின் பிரச்சினைகளை வெளிகொணர முயற்சிக்கின்றோம்.

அதற்கு வீட்டுப்பணிப்பெண்கள் அவர்களின் பிரச்சினைகளை கூறுவதற்கு
முன் வர வேண்டும். அத்துடன் வீட்டுப்பணிப்பெண்கள் சட்டபூர்வமாக பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே அவர்களுக்கான உரிமைகள் சுதந்திரம் கிடைப்பதோடு அதுபோல் ஊழிய சேமலாப நிதி மற்றும் ஈடிஎப் ஆகியவையும் கிடைக்கும்.

எனவே அவர்கள் தொழிலாளர் காரியாலயத்தில் இணைந்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இணைவார்களாகவிருந்தால் தான் ஒரு ஒருமித்த குரலாக எங்களால் முன்னோக்கி செல்ல முடியும் என அங்கு தெரிவித்தார்.