அரிசி உட்பட 50 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

253 0

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று (12) தொடக்கம் பல வகையான அரிசிகள் 100 ரூபாவுக்கும் குறைவான விலையில் ´சதொச´ வில் பெற்றுக்கொள்ள முடியும்.

வருட இறுதி வரையில் இந்தச் சலுகை நடைமுறையிலிருக்கும் என்று வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை ,50 வகையான அத்தியாவசியப் பொருட்களை ,சதொச மூலம் இன்று முதல் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.