அமெரிக்கா – சூறாவளி தாக்கி பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

204 0

கென்டகி மாகாண வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான சுழல் காற்று இது என அங்குள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டகி மாகாணம். இந்த மாகாணத்தில் அடுத்தடுத்து 4 முறை பயங்கர சூறாவளிக் காற்று தாக்கியது. இதனால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன.
சூறாவளி தாக்குதலில் சிக்கி 50 பேர் உயிரிழந்து இருக்கலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன. சுமார் 200 மைல் தூரத்திற்கு சுழன்று அடித்த காற்று பல்வேறு கவுண்டிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி விட்டதாக கென்டகி மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கென்டகி பகுதியில் சூறாவளிகள் தொடர்ந்து தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாக  அஞ்சப்படுகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என என்று கவர்னர் ஆண்டி பெஷீர் கூறியுள்ளார்.
இந்த சக்திவாய்ந்த சூறாவளி தாக்குதல்களுக்கு அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டகி, மிசோரி மற்றும் டென்னஸ்சி ஆகிய 5 மாகாணங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.