பிரதேச செயலக தரப்படுத்தலில் தெல்லிப்பளை முதலிடத்தில்

524 0
அரச துறையில் பிரதேச செயலகங்களுக்கிடையிலான தரப்படுத்தலில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் முதலாமிடத்தைப் பெற்றதோடு யாழ் மாவட்டத்தில் பங்கு கொண்ட 14 பிரதேச செயலகங்களும் வெற்றி பெற்றுள்ளது.

. அந்த வகையில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் முதலாம் இடத்தினையும் யாழ்ப்பாணம், தென்மராட்சி, பருத்தித்துறை பிரதேச செயலகங்கள் இரண்டாம் இடத்தினையும்,  சண்டிலிப்பாய், கோப்பாய், கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகங்கள் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது. மேலும், உடுவில் ,காரைநகர், சங்கானை, ஊர்காவற்றுறை ,மற்றும் வேலணை பிரதேச செயலகங்கள் சிறப்பு மெச்சுரை விருதினையும்
நெடுந்தீவு பிரதேச செயலகம் மெச்சுரை விருதினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.