வருமானமாக 900 மில்லியன் டொலர் கிடைக்கப்பெற்றுள்ளது

299 0
தென்னை பயிர்செய்கை மூலம் வருமானமாக 900  மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளதாகதென்னை  கித்துள் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்  அருந்திக்க பர்ணான்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தென்னைப் பயிர்செய்கை மூலம் வெற்றி பெற்றுள்ளது. இதனை நினைத்து நாம் பெருமிதம் அடைகின்றோம். சாதாரணமாக வருமானம் ஆண்டிற்கு 2.8 மில்லியன் வருமானம் கிடைக்கின்றது.1.8 மில்லியன் அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.

மிகுதியாக உள்ள சிறு தொகையானது மட்டுமே வெளிநாடுகளுக்கு அனுப்பி அதன் மூலம் வருமானம் கிடைக்கின்றது” என்றார். மேலும் அந்நிய செலவாணி குறைவாக செல்வதால் இளம் விவசாயிகளுக்கு தென்னை பயிர்களை கையளித்து அதன் வருமானத்தை அதிகரித்து தொழில் வாய்ப்பு இல்லாத இளைஞர் யுவதிகளுக்குதொழில் வாய்ப்பினைப் பெற்றுத் தரமுடியும்.  எனவும் அவர் தெரிவித்தார்.