40 ஆண்டுகளில் முதன் முறையாக சுவீடனில் வருகிறது அதிரடி மாற்றம்!

255 0

sweedan-1சுவீடலில் கடந்த 40 ஆண்டுகளில் முதன் முறையாக பாடசாலைகளில் இருபாலருக்கும் தனித்தனியாக வகுப்புகள் நடத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சுவீடனில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் பாடசாலைகள் திரும்பிய மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இருபாலரையும் பாடசாலைகளில் தனித்தனியாக கல்வி கற்றுக்கொள்ள பணித்துள்ளனர்.

Örebro நகரில் அமைந்துள்ள Adolfsberg பாடசாலையில் குறித்த திட்டத்தை பரிச்சார்த்த முறையில் 6 வார காலத்திற்கு நடைமுறப்படுத்த முடிவு செய்துள்ளனர். இதனால் மாணாக்கர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு என நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆனால் பாடசாலை நிர்வாகத்தின் இந்த அதிரடி முடிவிற்கு மாணாக்கர்கள் ஒட்டுமொத்தமாக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாணாக்கர் ஒருவர் இதுகுறித்து தெரிவித்துள்ள கருத்தில், பெண்களுக்கான பாடசாலையில் செல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தால் நான் சென்றிருப்பேன், ஆனால் அது 1974 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்து விட்டது. தற்போது அதுபோன்ற ஒரு திட்டம் சாத்தியமற்றது என்றார்.

பாடசாலை நிர்வாகத்தின் இந்த முடிவு மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல மன உளைச்சலை தரக்கூடியது என கருத்து தெரிவித்துள்ள மாணவர் ஒருவர், குறித்த முடிவு குறித்து பலமுறை எதிர்ப்பு தெரிவித்துள்ளோம், மீண்டும் இது குறித்து சமூக வலைதளங்களில் எழுதி வருகிறோம். ஆனால் பெண்களுக்கு சக ஆண் மாணவர்கள் முன் நின்று தங்கள் கருத்துக்களை முன்வைப்பதில் சங்கடம் இருப்பதாக தெரிவித்துள்ளனர் என நிர்வாகம் பதிலளித்துள்ளது.

மட்டுமல்ல, இது ஒரு சிறந்த முடிவு எனவும், இந்த முறை வாயிலாக மாணாக்கர்களை எளிதில் அணுக முடியும் என தலைமை ஆசிரியர் Anneli Widestrand கருத்து தெரிவித்துள்ளார்.

குறித்த முடிவு குறுத்து ஏற்கனவே மாணவர்களின் பெற்றோருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது