யாழ்.நல்லூர் செல்வா வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்த எரிவாயு அடுப்பு இன்று (10) அதிகாலை வெடித்துச் சிதறியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மட்டு. ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமை புரியும் மகன் நேற்றிரவு விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தார்.
இந்நிலையில் அவரது தாயார் அவருக்கு உணவு சமைத்துவிட்டு அடுப்பினை அணைத்துவிட்டு வெளியே வந்தார். இதன்போது சமையலறையில் பாரிய சத்தம் ஒன்று கேட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறி காணப்பட்டது. இருப்பினும் இச்சம்பவத்தின் போது சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.


