ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியில் மக்கள் வீதிகளில் தஞ்சம்

170 0

நிலநடுக்கத்தால் அதிர்ந்துபோன மக்கள் வீடுகளையும், இன்ன பிற கட்டிடங்களையும் விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் அடைக்கலம் புகுந்தனர்.

ஜப்பான் நாட்டின் காகோஷிமா மாகாணத்தில நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.05 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கம், 29.4 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 129.4 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் 20 கி.மீ. ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது.

டோக்கியோ மாகாணத்தின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் அதிர்ந்துபோன மக்கள் வீடுகளையும், இன்ன பிற கட்டிடங்களையும் விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் அடைக்கலம் புகுந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. எனினும் மக்கள் மத்தியில் சிறிது நேரம் பீதி நிலவியது. நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.