சட்ட விரோதமாக வெளிநாடு செல்வோரின் பாதுகாப்பை பொறுப்பேற்க மாட்டோம் -அரசாங்கம்

261 0
சுற்றுலா விசாவில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் எவ்வித பொறுப்பையும் ஏற்காது என தொழில் அமைச்சரான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் புலம்பெயர்ந்தோருக்கான ஓய்வூதியத் திட்டத்தின் நிலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரான சாந்த பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கான நடவடிக்கைகள் மூன்று மாதங்களில் நிறைவடையும் எனவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்கு பணிக்குச் செல்லும் அனைத்து தொழிலாளர்களுக்கும் விசேட காப்புறுதித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

தனி நபர்கள் வருகை தரு விசாவில் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். இதன் விளைவாக அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை.
இந்த நபர்களையும் அரசாங்கம் கருத்திற் கொள்ள வேண்டும்.
பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் வேலைவாய்ப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.