சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான அண்மைய சம்பவங்களுக்கு காரணமான அனைத்து நபர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சீ.ஐ.டி) நேற்று (07) முறைப்பாடு செய்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்களான ஜே. சி. அலவத்துவல, முஜிபூர் ரகுமான், ஹர்ஷன ராஜகருணா, ஹெக்டர் அப்புஹாமி, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் உட்பட பலர் சீ.ஐ.டிக்கு விஜயம் செய்திருந்தனர்.நமது நாட்டில் 40 சதவீதம் மக்கள் எரிவாயுவை பயன்படுத்துகின்றனர்.
இன்று எரிவாயு சிலிண்டர் வாங்குவது என்பது வீட்டில் வெடிகுண்டு வாங்குவது போல் ஆகிவிட்டது. இதனால் அந்த மக்கள் அனைவரும் இன்று பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று, முறைப்பாடு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜே. சி. அலவத்துவல தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், “சமீபகாலமாக நாட்டில் பாரிய எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் அரசாங்கம் எரிவாயு விலையை மக்கள் தாங்க முடியாத அளவிற்கு உயர்த்தியது. எரிவாயுத் தட்டுப்பாட்டுக்கு நிவாரணம் வழங்கி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக கலவை தொடர்பில் சிக்கல்கள்
எழுந்துள்ளன.
எரிவாயு சிலிண்டர் விரைவில் தீர்ந்துவிடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்ற அதேவேளை, நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறுகின்றன.தரமற்ற எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு அவற்றின் கலவை மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சர்ச்சையை ஏற்படுத்திய லிட்ரோ நிறுவனம் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அரச நிறுவனம் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.சுமார் 472 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாளாந்தம் சுமார் பத்து எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக இந்த எரிவாயு நிறுவனத்தின் தலைவரிடமோ, இயக்குநர் குழுவிடமோ இதுவரை ஆலோசனை நடத்தப்படவில்லை.எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான வெடிப்புகள் மற்றும் அவற்றின் கலவை தொடர்பான நிலைமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் எமது எம்.பிக்கள்
முறைப்பாடு செய்துள்ளனர்.
தரமற்ற எரிவாயு சிலிண்டர்களை சந்தையில் இருந்து அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். சீ..டி மற்றும் பொலிஸ்மா அதிபரிடம் முறையான விசாரணை நடத்தி குற்றவியல் சட்டத்தின்படி தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

