சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுனர் முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதான பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளாக ஜெயில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி அரசியல் கட்சியினர், தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அமைச்சரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுனர் முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இன்று வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ‘‘பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது கவர்னர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல. இந்த விவகாரத்தில் கவர்னர் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கை மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பதாகவும், மத்திய அரசு தரப்பில் இனி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

