நீர்கொழும்பில் எரிவாயு அடுப்பு வெடித்தது

252 0

நீர்கொழும்பு, தளுபத்தை, கல்கட்டுவ, சமகி மாவத்தை எனும் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (06) பிற்பகல் 12.45 மணியளவில் வீட்டிலிருந்த எரிவாயு அடுப்பு பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது.

சமையல் எரிவாயு சிலின்டரில் ஏற்பட்ட கசிவை அடுத்தே அந்த வீட்டிலிருந்த எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. எனினும், இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

வீட்டு உரிமையாளரின் மனைவி சமையல் செய்து கொண்டிருந்துள்ளார். இடையில் அவர் சமையலறையிலிருந்து குளியலறைக்குச் சென்ற வேளையிலேயே அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.

இதன் காரணமாக அடுப்பின் மேற்பகுதி சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. எரிவாயு சிலின்டருக்கு சேதம் ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரால் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.