எதிர்வரும் 8ஆம் திகதி முதல் தடைப்படாது

322 0

எதிர்வரும் 8ஆம் திகதி முதல் மின் விநியோகம் சீர் செய்யப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கடந்த 3ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்ட நிலையில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பணிகள் சீர் செய்வதற்கு சில பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, சில பகுதிகளில் தினமும் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை குறைந்தது ஒரு மணி நேரமாவது மின்வெட்டு ஏற்பட்டது.

எனினும் இந்த நிலை, 8ஆம் திகதி முதல் சீர்செய்யப்பட்டு, தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.