வாழைத்தோட்டம் ‘பவாஸ்’ கொலைச் சந்தேக நபர்கள் வாள்களுடன் கைது!

257 0

கொழும்பு வாழைத்தோட்டத்தைச்(கெசல் வத்த) சேர்ந்த பவாஸ் என்பவர் கூரிய ஆயுதத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 4 வாள்கள் மற்றும் கார் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய ஜோன் வீதியில் சனிக்கிழமை (04) இரவு 11.00 மணியள வில் மொஹமட் காமில் மொஹமட் பவாஸ் ஒரு குழுவினரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

கொலைகாரர்கள் காரில் வந்தே இக்கொலையை அரங்கேற்றியுள்ளதாகத் தெரியவருகிறது.