மேச்சலுக்காக விடப்பட்ட 6 ஆடுகள் ஒரே சமயத்தில் களவாடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று வல்வெட்டித்துறை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பிரிவில் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் தனது 6 ஆடுகளையும் மேச்சலுக்காக வெளியில் அனுப்பியுள்ளார். நேற்று பிற்பகல் வரை 6 ஆடுகளும் திரும்பி வராத நிலையில் வல்வெட்டித்துறை பொலீஸார் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 6 ஆடுகளும் களவாடப்பட்டுள்ளதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக யாருக்காவது தகவல் தெரிந்தால் வல்வெட்டித்துறை பொலீஸாருக்கு தெரியப்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

