வீதிக்கு குறுக்காக வளந்திருக்கும் செடிகளை வெட்டுமாறு பொதுமக்கள் வேண்டுகோள்

321 0

நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் வீதியின் குறுக்காக வளந்திருக்கும் செடிகளை வெட்டுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் நெல்லியடி பொலீஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியில் மக்களின் போக்குவரத்து இடையூறாக வீதியில் உள்ள செடிகள் பெரிதாக வளர்ந்து காணப்படுகிறது.
இதனால் விக்னேஸ்வரா கல்லூரி மற்றும்  தனியார் கல்வி நிலையத்திற்கு செல்லும் மாணவர்கள் விபத்திற்குள்ளாக வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் கரவெட்டி பிரதேச சபை மற்றும் நெல்லியடி பொலீஸ் நிலைய உத்தியோகத்தர்கள் கவனமெடுக்குமாறும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.