ஜப்பானில் ஒமிக்ரான் வைரஸ் பரவியது

140 0

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் ஜப்பான் நாட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ், ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது.இந்த நிலையில், அந்த வைரஸ் ஜப்பான் நாட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளது. நமீபியாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமையன்று ஜப்பானுக்கு வந்துள்ள 30 வயதை கடந்த ஒரு பயணிக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை ஜப்பான் தலைமை மந்திரிசபை செயலாளர் ஹிரோகா‌ஜு மாட்சுனோ உறுதி செய்தார்.

இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் ஜப்பான் நேற்று தடை விதித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பகுதியான இந்திய பெருங்கடல் தீவு ரீயூனியனிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை பிரான்ஸ் அரசின் செய்தி தொடர்பாளர் கேபிரியேல் அட்டல் உறுதிபடுத்தினார்.

மொசாம்பிக் சென்று விட்டு, தென் ஆப்பிரிக்காவில் இறங்கி பின்னர் தன் பயணத்தை தொடர்ந்த 53 வயது ஆணுக்கு இந்த தொற்று பாதித்துள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.