திருமண மண்டபங்களில் 200 பேருக்கு மாத்திரமே அனுமதி!

142 0

இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருமண மண்டபத்தின் கொள்ளவில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமல் அதிகபட்சமாக 200 விருந்தினர்கள் கலந்து கொள்ளலாம்.

வெளிப்புற திருமண வைபவங்களில் 250 பேர் வரை கலந்து கொள்ளலாம்.

திரையரங்குகளில் ஒரு காட்சிக்கு இருக்கை எண்ணிக்கையில் 75% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதுடன், அலுவலகம் மற்றும் தொழில்முறை சந்திப்புகளில் 150 பேர் மட்டுமே பங்குபற்ற முடியும்.

நேற்றைய தினம் 722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 563, 989 ஆக அதிகரித்துள்ளது.

புதிய கொவிட் தொற்றாளர்களில் மூன்று வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.

அதன்படி, நாட்டில் 9,256 கொவிட் தொற்றாளர்கள் தற்போது  சிகிச்சையில் உள்ளனர்.

இதேவேளை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்திய 18 கொரோனா மரணங்களுடன் நாட்டில் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14,346 ஆக உயர்வடைந்துள்ளது.