தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூர்யஆர பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனமல்வில பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது.

