தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 யேர்மனி ஸ்ருட்காட்

1711 0

யேர்மனியில் அதிவேகத்துடன் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா விசக்கிருமியின் தாக்கத்திற்கு முகம்கொடுத்தபடி அதன் சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனியின் ஐந்து மாநிலங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மண்டபங்கள் சிலமணித்தியாலத்திற்கு முன் மறுக்கப்பட்ட நிலையிலும் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டு மாவீரரின் துணைகொன்டு இந் நிகழ்வை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு யேர்மனிவாழ் தமிழீழமக்கள் மாபெரும் புரிந்துணர்வுடன் ஒத்துளைத்து தேசிய மாவீரர் நாளினை சிறப்புற நடாத்துவதற்கு துணைநின்றனர்.

அந்த வகையில் யேர்மனியின் தென்மாநிலத்திற்கான மாவீரர் நாள் ஸ்ருட்காட் நகரத்தில் திறந்த வெளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கால நிலை ஒத்துளைக்காத நிலையிலும் மாவீரர் துயிலும் இல்லங்களை கடும் குளிரில் நின்றபடி பணியாளர்களும், மக்களுமாக இணைந்து சில மணித்தியாலங்களுக்குள் சிறப்பாக அமைத்தனர். மாவீரர் நிகழ்வுகள் ஆரம்பித்து மக்கள் மாவீரர்களுக்கு தீபமேற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தும் வரை அமைதிகாத்த இயற்கை கலை நிகழ்வுகள் ஆரம்பித்தபோது வெள்ளை மழையாகப் பொழிந்தது.

இயற்கை இடைவெளி கொடுத்தபோது சில நிகழ்வுகளை நடாத்தி பல நிகழ்வுகளை இடைநிறுத்தி இறுதிவரை இணைந்திருந்த மக்களுடன் தமிழீழத் தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கைப் பாடலுடன் தேசிய மாவீரர் நாள் 2021 நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.