எதிர்க் கட்சிகளின் தீய நோக்கங்கள் குறித்து கிறிஸ்தவ மத குருமார் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில எதிர்க் கட்சி அரசியல்வாதிகள் கிறிஸ்தவ திருச்சபையை பிழையாக வழிநடத்தியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவு மதகுருமார் எதிர்க்கட்சியினரின் தீய நோக்கங்களிற்கு பலியாகக் கூடாது என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவர் தெரிவித் துள்ளார்.
அருட்தந்தை சிறில் காமினி சிஐடிக்கு அழைக்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் சாதகமாக பயன்படுத்தியுள்ளதை அவதானித்துள்ளோம் அவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டுவதற்கு இதனைப் பயன்படுத்தியுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறில்காமினி வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காகவே சிஐடிக்கு அழைக்கப்பட்டார் அவர் பகிரங்க அறிக்கை களை வெளியிட்டார். இதனால் சிஐடியினர் அவரிட மிருந்து வாக்குமூலத்தை பெற விரும்பினார்கள் இது இயல்பானது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து மக்கள் உயிரிழந்ததாக அண்மையில் ஒரு தேசிய நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் நாங்கள் விசாரித்தபோது, எரிவாயு சிலிண்டர் வெடித்து மக்கள் இறந்ததாக செய்திகளை நாங்கள் காணவில்லை. பொலன்னறுவை பிரதேசத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும், உயிரிழந்தவர்
இறப்பதற்கு முன்னர் விபத்து தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஊடகங்கள் இவ்விவகாரத்தை ஆராய்ந்து செய்தி வௌியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். எதிர்க்கட்சிகள் சொல்பவையெல்லாம் ஊடகங்களில் வௌிவந்தால் மக்கள் கொந்தளிப்பார்கள். நாட்டில் பெற்றோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தேசிய ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஆனந்த பாலித்த அண்மையில் தெரிவித்திருந்தார். அது மக்களை வரிசையில் காத்திருக்க வைத்தது. ஆனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை. எமது அரசாங்கம் ஊடகங்களுடன் மோதும் அரசாங்கம் அல்ல. ஊடகங்கள் அனைத்தையும் ஆராய்ந்தே செய்தி வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அருட்தந்தை சிரில் காமினி ,குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் இன்று எங்கும் பேசப்படுகிறது. அவர் வழங்கிய கூற்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார். பொதுமக்கள் அல்லது மதகுருமார்கள் கூறும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பது சிஐடியின் பணியும் கடமையும் ஆகும். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளாதிருந்தால், இந்த அறிக்கைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியிருக்கும். அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதில்லை. அரசியல் கைப்பாவையாக மாற வேண்டாம் என்று அருட் தந்தைகளை கேட்டுக் கொள்கிறேன். எதிர்க்கட்சியை சேர்ந்த சதிகாரர்கள் ஏற்கனவே தேவாலயத்திற்குள் ஊடுருவிவிட்டனர்.
இந்த இரண்டு வருடங்களில் , நாட்டை திறந்து விடுங்கள், வெளிநாட்டினரை வரவழைப்போம், நாட்டின் டொலர் வருமானத்தை அதிகரிப்போம், விவசாயம் செய்வோம், பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்று எதிர்க்கட்சிகள் ஒருபோதும் கோரியது கிடையாது. 71ல் ஜே.ஆர்.ஜெயவர்தன எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அம்மையாருக்கு உதவுவதாகக் கூறினார். இன்றுள்ள எதிர்க்கட்சி அவ்வாறு இல்லை. வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். தங்கள் தரப்பினரை பயன்படுத்தி விமர்சிக்க முயற்சிக்கிறார்கள். இந்த நாடு முன்னேற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கடந்த அரசாங்கம் இன்று இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். பலப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை முன்னைய அரசாங்கம் நாசமாக்கியது. நாட்டை அபிவிருத்தி செய்ய போதுமான பணம் இருந்தது. ஆனால் எங்களிடம் டாலர்கள் இல்லை, அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்த சுமார் ஒன்றரை இலட்சம் அப்பாவிகள் மீண்டும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்களை வாக்களிக்க வரவழைத்ததாக எம்மீது குற்றம் சுமத்தினார்கள். அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான தடுப்பூசியை ஏற்றினோம். சில நாடுகளுக்கு நுழைவதற்கு ஒரே ஒரு தடுப்பூசியை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது..
நாங்கள் அதனை வழங்கினோம். வந்தவர்கள் கடவுச்சீட்டை தயார் செய்து கொண்டு வெளிநாடு சென்று விடுகின்றனர். ஆனால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்ற கருத்தை எதிர்க்கட்சிகள் பரப்பின. எமது கட்சி மாநாட்டில் பிரதமர் மகிந்த ராஜபக்ச இதை பற்றி ஆராயுமாறு சொன்னார்.
நாம் தேடிப்பார்த்த போது தடுப்பு மருந்துகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்ல வந்தவர்களே அவர்கள் என்பது தெரிந்தது. இலங்கையை விட்டு வெளியேற வேண்டுமானால் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் இவர்கள் ஐரோப்பாவுக்குச் செல்லும் மக்கள் அல்ல. கோட்டாபய ராஜபக்சவின் காரணமாகவே அவர் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது. ஆனால் அவரால் தான் அந்த மக்கள் நாட்டிற்கு வந்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் வேறு நாடுகளில் இறந்த போது, அந்த நாடுகளில் வாழும் எமது மக்கள் கோத்தபாய ராஜபக்ச மீது நம்பிக்கை வைத்து அந்த நாடுகளை விட்டு வெளியேறி இங்கு வந்தார்கள். வெளிநாடு செல்லும் மனிதர்களை நாம் வணங்க வேண்டும். அவர்களிடமிருந்து வரும் டாலர்களால்தான் இந்த நாட்டிற்கு எண்ணெய் கூட இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த மக்களைத் தான் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் என்று அவமானப்படுத்தியுள்ளனர்..

