யாழில் தேவாலயத்தின் மீது கல்லெறி தாக்குதல் நடத்தியவர் கைது!

354 0

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 3.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதானவர் யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் மது போதையில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.