இரு விடுதிகள் சுற்றிவளைப்பு! – ஐவர் கைது

408 0

கம்பஹா, நீர்கொழும்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பீரிஸ் மாவத்தை மற்றும் ஏத்துகால ஆகிய பிரதேசங்களில் இரு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விபச்சார விடுதிகளை நடத்திச் சென்ற இருவரும் விபச்சார விடுதியை நடத்திச் செல்வதற்கு உடந்தையாக இருந்த மூன்று பெண்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, வய்க்கால், அம்பாறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 – 56 வயதுக்கு இடைப்பட்டவர்களே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.