களுபோவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் தீ!

192 0

கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டடமொன்றில் இன்று (28) காலைத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மின் ஒழுக்கின் காரணமாக இந்த தீ விபத்துக்கு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை, சேத விபரம் இதுவரை வெளியாகவில்லை