வாக்காளர் டாப்பு பெயர் பதிவுக்கு டிசம்பர் 03 வரை கால அவகாசம்

166 0

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அந்தத் தேர்தலை நடத்துவதற்கான உள்ளுராட்சி மன்றங்களின் யாப்பு ரீதியிலான  பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கும் அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (23) தீர்மானித்துள்ளது.

உள்ளாட்சி மன்றங்களின் பதவிக்காலம் அடுத்த வருடம் (2022) பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

அதன்படி உரிய படிவங்கள், அலுவலர்கள் மற்றும் வாகனங்கள் கணக்கெடுப்பு, வாக்களிப்பு நிலையங்களை கண்டறிந்து அவற்றின் குறைபாடுகளை கண்டறியதல் உள்ளிட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கு,  மாவட்ட துணை மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் அறிவிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு (2021) வாக்காளர் டாப்பில்  பெயரை பதிவு செய்யத்தவரியவர்கள், அது தொடர்பான தகவல்களை டிசம்பர் மாதம் 03 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது