300 சுற்றுலா தலங்களை சர்வதேச தரத்துக்கு மாற்ற திட்டம்- தமிழக அரசு அனுமதி

250 0

தமிழ்நாட்டில் உள்ள 300 சுற்றுலாத்தலங்களை சர்வதேசதரத்திற்கு இணையாக மாற்ற முடிவு செய்து சுற்றுலா பெருந்திட்டத்தை தயாரிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் தனித்துவத்தை நிலைப்படுத்துதல், சுற்றுலாத்தலங்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுலாப் பயணிகள் தங்கும் காலத்தினை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசின் சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

தனியார் மற்றும் அந்நிய முதலீட்டை உருவாக்குதல், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுற்றுலா பெருந்திட்டத்தை ஏற்படுத்த தமிழக அரசு சுற்றுலாத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் கலாச் சாரம், வரலாறு மற்றும் பாரம் பரிய உணவுமுறையை பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகளை அதிகளவு ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இவை அனைத்தையும் 300 சுற்றுலாத்தலங்களில் செயல்படுத்தி சர்வதேச தரத்துக்கு இணையாக மாற்றும் விதமாக சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.