தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதில் தவறில்லை: இல.கணேசன்

380 0

201701131010315462_Ganesan-MP-Interview-Tamil-Nadu-despite-ban-jallikattu_SECVPFதமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதில் தவறு ஏதும் இல்லை என்று இல. கணேசன் எம்.பி. கூறினார்.

பா.ஜ.க. மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தைப்பொங்கல் என்பது ஜல்லிக்கட்டு இல்லாமல் முழுமை பெறாது. தைத்திரு நாள் குறித்து அறியாத சிலர் தொடர்ந்த வழக்கால் அதை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் விரைந்து வழக்கில் தீர்ப்பை அளித்திருக்கலாம்.

நல்ல தீர்ப்பு வரும் என்றே அனைவரும் எதிர் பார்த்தோம். ஆகவே நீதிபதிகள் விரைந்து செயல்பட்டு ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கினால் நல்லது.

நடை பாதையில் படுத்திருந்தவர்கள் மீது நடிகர் கார் ஏற்றிய வழக்கில் இரவோடு இரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோடிக்கணக்கான மக்களின் கோரிக்கையான ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் விருப்பம். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தடையை மீறி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுவது போல நடத்த முடியாது.

தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதில் தவறில்லை என்பதே எனது தனிப்பட்ட கருத்து. ஜல்லிக்கட்டுக்காக சுப்பிரமணியசுவாமி நீதிமன்றத்தில் வாதாடிய விதம் பாராட்டத்தக்கது. தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவது போன்ற காரணங்களுக்கெல்லாம் மாநில அரசு மீது 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்த முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.