சாரதி அனுமதி பத்திரம் பெறும் முறையில் பாரிய மாற்றம்!

213 0
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சைகள் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமது திணைக்களத்தினால் நடத்தப்படும் எழுத்து மூலப் பரீட்சைகளுக்கு மேலதிகமாக, குறித்த எழுத்து மூலப் பரீட்சைகளை நடத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த பகுதியில் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சையில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

இதேவேளை, ஆந்துருப்புவீதி, வத்தளை மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து விற்பனை செய்தமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதி பத்திரம் ஒன்று 13 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை சுமார் 1,000 போலி சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.