கடந்த 15 ஆம் திகதி குருநாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெரலியாவல பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேய்வடைந்த ஆயுதமொன்றால் தாக்குதல் மேற்கொண்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனையடுத்து, வீல்கொடவத்த பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் நேற்று(17) கைதுசெய்ப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபரை குருநாகல் நீதவான் நீதிமன்றில் இன்று(18) முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

