இரு வாரங்களில் 19,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

162 0

இந்த மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் 19,000 சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதில் பெரும்பாலானவர்கள் இந்தியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம், ஜேர்மன் ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என அந்த அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது