தமிழ் மிரர் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எம்.ஏ.பரீட், திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைத்து நேற்று (16) மாலை காலமானார்.
மரணிக்கும் போது அவருக்கு வயது 64ஆகும்.
திருகோணமலை மாவட்டம், சின்னக் கிண்ணியாவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியருமான இவர், தினகரன் பத்திரிகையின் திருகோணமலை மாவட்ட விசேட நிரூபரும் ஆவார்.
41 வருடங்கள் ஊடக அனுபமிக்கவருமான அன்னார், கபூர்நிஸாவின் அன்புக் கணவரும் இம்ரான், இஹ்ஸானா (சட்டத்தரணி), இஜாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, கிண்ணியா றகுமானியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

