
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவில் வாள்கள் மற்றும் கோடாளி என்பற்றுடன் மூவரை, நேற்று (13) மாலை கைதுசெய்துள்ளதாக சந்திவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.சுதர்சன் தெரிவித்தார்.
சித்தாண்டி விநாயகர் கிராமத்தில் வாள்களுடன் ஒரு குழு சுற்றித்திரிவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 06 வாள்கள் மற்றும் கை கோடாளி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரணைகள் இடம் பெற்று வருவதுடன், ஏறாவூர் நீதிமன்றில் அவர்களை ஆஜர்படுத்தப்படுவுள்ளதாகவும் சந்திவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

