வாகன இறக்குமதி தொடர்பான அறிவிப்பு

245 0

அடுத்த 06, 07 மாதங்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என தெரிவிக்கும் திறைச்சேரி, நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எஸ். ஆட்டிகல, தற்போது வாகன இறக்குமதி முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து அடுத்த 06 அல்லது 07 மாதங்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது. கடந்த மார்ச் முதல் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், வாகன இறக்குமதி தொடர்பில் உடனடியாக எந்த முடிவுகளும் எட்டப்படாது. நாட்டின் தற்போதைய நிலைமைகளில் வாகன இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய அவசியம் இருப்பதாக தான் நினைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.