2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று காலை ஆரம்பமாகி உள்ளது.
இன்று முதல் இம்மாதம் 22ஆம் திகதி வரை ஏழு நாட்கள் வரவு-செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.
நவம்பர் 22ஆம் திகதி பி.ப 05.00 மணிக்கு இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
நவம்பர் 23ஆம் திகதி முதல் குழு நிலையிலான விவாதம் ஆரம்பமாகவிருப்பதுடன், சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசம்பர் 10ஆம் திகதி வரை 16 நாள்கள் விவாதத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

