மொரட்டுவை, எகொடஉயன தேசபந்து மாவத்தை பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டள்ளார்.
இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நபர் ஒருவர் தள்ளி விட்டதை அடுத்து, குறித்த பெண் நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
71 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

