24 வருடங்களின் பின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் OIC ஆக நியமனம்

237 0

இலங்கை பொலிஸ் வரலாற்றில் 24 வருடங்களின் பின்னர் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக (OIC) நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி கம்பஹா-  நால்ல பொலிஸ் நிலையத்தின் புதிய  பொறுப்பதிகாரியாக  தலைமைப் பொலிஸ் பரிசோதகர் காஞ்சன சமரகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இவர் நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டார்.