சிறிய, நடுத்தர தொழில் முனைவோருக்கு செயலமர்வு

224 0
உலக வங்கியின் சர்வதேச வர்த்தக நிலையம், இலங்கை வர்த்தக திணைக்களத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான பயிற்சிச் செயலமர்வு, கல்குடா தனியார் விடுதியில் இன்று (11) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஜேர்மன் தொழினுட்ப நிறுவனமான கூட்டமைப்பான GIZ  நிதியுதவி அளித்திருக்கிறது.

இன்றும் (12) நடைபெறவுள்ள  இச்செயலமர்வில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்துக்கு தமது உற்பத்திகளைக் கொண்டுசெல்ல உத்தேசித்துள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை ஒழுங்கமைத்து ஓர் எழிய இலகுவான ஏற்றுமதி வர்த்தகத்தை அரசாங்கத்துடன் இணைந்து எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

நேற்றைய செயலமர்வில் அதிகளவிலான இளம் தொழில்முனைவோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்.